அறிவியல் கருத்தரங்கம் நிகழ்ச்சி
அறிவியல் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது;
வெள்ளியணை
ஜெகதாபி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தலைமையாசிரியர் தீனதயாளன் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் மகேஷ் கண்ணா வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக தனியார் கல்லூரியில் பணிபுரியும், ஆய்வு மாணவர்களின் வழிகாட்டி பேராசிரியர் நடராஜன் கலந்துகொண்டு, இன்றைய வாழ்க்கை முறையில் அறிவியலின் பயன்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறி பேசி, இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வருங்காலத்தில் வாழ்க்கைக்கு நன்மையும், உதவியும் செய்யும் பயனுள்ள அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து புகழ் பெற வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும் சிறப்பு விருந்தினர் நடராஜன் தனது சொந்த நிதியின் மூலம் சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள அறிவியல் கலைக்களஞ்சியம் நூல்களை மாணவர்களின் பயன்பாட்டுக்காக பள்ளியின் நூலகத்திற்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியை ஹேமலதா நன்றி கூறினார்.