2 ஏக்கர் கரும்பு தீயில் எரிந்து நாசம்

2 ஏக்கர் கரும்பு தீயில் எரிந்து நாசம்;

Update:2021-03-04 01:12 IST
கீழப்பழுவூர்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட செங்கராயன் கட்டளை கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மகன் சின்னமணி என்பவர் ஊரின் வடக்குப்புறம் கரும்பு பயிரிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அவரது கரும்பு வயலில் திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று வீசியதால் தீ மளமளவென பரவி கரும்புகள் எரிய தொடங்கின. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அரியலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்தாலும், சுமார் 2 ஏக்கர் கரும்பு தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. கரும்பு வயலுக்கு மேலே சென்ற மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதில் தீப்பொறி எழுந்து இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்