அய்யா வைகுண்டர் வாகன ஊர்வலத்துக்கு வரவேற்பு

திசையன்விளையில் அய்யா வைகுண்டர் வாகன ஊர்வலத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.;

Update:2021-03-04 02:02 IST
திசையன்விளை, மார்ச்:
அய்யா வைகுண்டசுவாமி அவதார தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் பதியில் இருந்து புறப்பட்டு திசையன்விளை வந்த வாகன ஊர்வலத்திற்கு ஊர் எல்கையில் மேளதாளம் முழங்க கோலாட்டத்துடன் முத்து குடை பிடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. வழி நெடுகிலும் அய்யாவழி பக்தர்களுக்கு குளிர்பானங்கள், பழங்கள், உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. பின்னர் வாகன ஊர்வலம் எருமைகுளத்தில் உள்ள ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் நாங்கலை அடைந்தது. அங்கு பணிவிடையும், அன்ன தர்மமும் நடந்தது.

மேலும் செய்திகள்