காஞ்சீபுரம் மாவட்டத்தில் 93 பேரின் துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைப்பு

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றது.;

Update:2021-03-04 10:56 IST
அந்த வகையில் தேர்தல் நடத்தை விதிகளின்படி துப்பாக்கிகளை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் அல்லது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்பேரில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், முன்னாள் போலீஸ் அதிகாரிகள் என மாவட்டம் முழுவதும் 162 பேருக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

இதில் 93 பேர் துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைத்துள்ளதாக மாவட்ட போலீஸ்துறை தெரிவித்துள்ளது. மீதமுள்ளவர்கள் விரைவில் ஒப்படைப்பார் எனவும் ஒப்படைக்காத நிலையில் அவர்களின் வீடுகளுக்கு சென்று துப்பாக்கிகள் பெறப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்