மின்வாரிய பணியாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி முகாம்
மின்வாரிய பணியாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.;
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்தமங்கலம் துணை மின்நிலையத்தில் புதிதாக கேங்மேன் பணிக்கு சேர்ந்த பணியாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் செயற்பொறியாளர் சாமிதுரை கலந்து கொண்டு, பாதுகாப்பான முறையில் பணி செய்வது எப்படி?, மின்சார வாரியத்திற்கு வளர்ச்சியை தேடித்தருவது எப்படி? என்பது குறித்து விளக்கம் அளித்தார். அதைத்தொடர்ந்து உதவி செயற்பொறியாளர்கள் ராஜேந்திரன், சின்னதுரை, பிரபாகரன், உதவி மின் பொறியாளர் சிவரஞ்சனி ஆகியோர் புதிதாக பணியில் சேர்ந்த கேங்மேன்களுக்கு எர்த் ராடு, கையுறை, இடுப்பு கயிறு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து மின் விபத்து இல்லாமல் எப்படி பணியாற்றுவது? என்பது குறித்து விளக்கம் அளித்தனர். மேலும் மின் விபத்து ஏற்படாத வகையில் எப்படி பணியாற்றுவது என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. முடிவில் புதிதாக பணியில் சேர்ந்துள்ள பணியாளர்கள் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.