மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்

100 சதவீதம் வாக்களிப்பது குறித்து மாற்றுத்திறனாளிகளின் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2021-03-04 18:58 GMT
அரியலூர்:
அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையிலும், மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும், நேற்று இருசக்கர வாகன ஊர்வலம் நடத்தினர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தை கலெக்டரும், தேர்தல் அலுவலருமான ரத்னா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட 150-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று அரியலூர் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. முன்னதாக வாக்களிப்பதன் அவசியம் குறித்த கையெழுத்து இயக்கத்தை கலெக்டர், கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். மேலும் அரியலூர் பஸ் நிலையத்தில் கலைக்குழு மூலம் நடைபெற்ற பிரசார இயக்கத்தில் பஸ்சில் பயணித்த வாக்களர்களுக்கு 100 சதவீதம் தேர்தலில் பங்கேற்றல் மற்றும் நெறிமுறையான வாக்களித்தல் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்