உறுதிமொழி ஏற்பு
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது.;
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில், சட்டமன்ற தேர்தலின்போது 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகராட்சி அலுவலக பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் ஆணையர் (பொறுப்பு) சிவராமகிருஷ்ணன், இளநிலை உதவியாளர் ஷகிலா பானு, புள்ளிவிவர குறிப்பாளர் கோகிலா மற்றும் அலுவலக பணியாளர்கள், தூய்மை இந்தியா இயக்க பரப்புரையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.