தேர்தல் பணிக்கு செல்லும் அலுவலர்களுக்கு தடுப்பூசி

தமிழக தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.;

Update:2021-03-07 09:14 IST

காஞ்சீபுரம்,

தமிழக தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனைத்து நிலை பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவித்தார்.

அதன் அடிப்படையில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள், தேர்தல் மண்டல அலுவலர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் காஞ்சீபுரம் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் நகர் நல அலுவலர் முத்து, தேர்தல் உதவியாளர் கலையரசன், நகராட்சி உதவியாளர் தேவராஜன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் சீனிவாசன், ரமேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகள்