6,102 பேருக்கு கொரோனா தடுப்பூசி

6,102 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

Update: 2021-03-07 18:36 GMT
புதுக்கோட்டை
கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக முன் களப்பணியாளர்களுக்கு 5,448 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதனைத்தொடர்ந்து 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்தவகையில், 654 பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 13 வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 2 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, 11 அரசு மருத்துவமனைகளிலும், 9 தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை 6,102 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பூசியினால் பக்கவிளைவுகள் எதுவுமில்லை. பொதுமக்கள் எவ்வித தயக்கமின்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என கலெக்டர் உமாமகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்