நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் தீவிர சோதனை

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் தீவிர சோதனை

Update: 2021-03-07 20:47 GMT
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலும் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வினியோகிப்பதை தடுக்க பறக்கும்படை அதிகாரிகள் தலைமையில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டு, தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.  இந்த நிலையில் ரெயில்கள் மூலம் பணம், பரிசு பொருட்கள் கொண்டுவருவதை தடுக்க நாகர்கோவில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரைட், ஜோசப் ஆகியோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டன. அவர்கள் நேற்று கோட்டார் ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் ரெயிலில் வந்த பயணிகளின் உடமைகள் அனைத்தையும் தீவிர சோதனை செய்தனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை. இந்த சோதனை தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்