பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை

அவினாசி தாலுகா அலுவலகத்தில் பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-03-07 22:44 GMT
அவினாசி
அவினாசி தாலுகா அலுவலகத்தில் பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தாலுகா அலுவலகம் 
அவினாசி சேவூர் ரோட்டில் அரசு மருத்துவமனை அருகில் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தாலுகா அலுவலக வளாகத்திற்குள் சட்டம் ஒழுங்கு, குற்றவியல் ஆகிய நீதிமன்றங்கள், கிளை சிறைச்சாலை ஆகியவை உள்ளது. இந்த நிலையில் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்து பல்வேறு சான்றுகள் பெறுவதற்காகவும் வருகிறார்கள். மேலும் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கும், கிளை சிறையில் அடைக்கப்பட்டவர்களை பார்ப்பதற்காகவும், ஏராளமானவர்கள் இங்கு வருகின்றனர். அவர்கள் வந்த வேலை முடிய மணி கணக்கில் தாலுகா அலுவலக வளாகத்தில் காத்திருக்கவேண்டியுள்ளது. அந்த சமயத்தில் இயற்கை உபாதைகளை கழிக்க வழியின்றி மிகவும் அவதிக் குள்ளாகின்றனர். 
ஆண்கள் தாலுகா அலுவலகத்தை ஒட்டியுள்ள நேரு வீதி சந்தில் இயற்கை உபாதை கழிக்கின்றனர். இதனால் அந்த வழியில் போவோர் வருவோர் முகம் சுழிக்கின்றனர். இதில் பெண்கள் பாடுபடு திண்டாட்டமாக உள்ளது. 
சுகாதார வளாகம்
இயற்கை உபாதைகளை அடக்க முடியாத நிலையில் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று வீட்டாரிடம் அனுமதி பெற்று உபாதைகளை கழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். தாலுகா அலுவலக வளாகத்தில இருக்கும் ஒரு கழிவறையும் பயன்பாடின்றி பூட்டி கிடக்கிறது. பொதுமக்களின் நலன்கருதி தாலுகா அலுவலக வளாகத்திற்குள் கழிப்பறை வசதி செய்து தரவேண்டும் . சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனிப்பார்களா என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் செய்திகள்