தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.2¼ லட்சம் பறிமுதல்

தமிழக-கேரள மாநில எல்லையில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.2 லட்சத்து 29 ஆயிரம் பறிமுதல்

Update: 2021-03-08 15:31 GMT

கம்பம்:

தமிழக-கேரள மாநில எல்லையான கம்பம்மெட்டு சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுந்தர மகாலிங்கம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் மற்றும் குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 

அப்போது, கேரளாவை நோக்கி வந்த காரை பறக்கும் படையினர் மறித்து சோதனை செய்தனர். 

இதில் காரில் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 900 இருந்தது. மேலும் விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் கேரளமாநிலம் வண்டன்மேடு பகுதியை சேர்ந்த அபிலாஸ்ஜோசப் (வயது 28) என்பதும், அவரிடம் பணம் கொண்டு வந்ததற்கான ஆவணங்கள் இல்லை என்பதும் தெரிய வந்தது. 


இதுபோல கம்பம்மெட்டு மலை அடிவாரத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கதிரேஷ்குமார், சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 

அப்போது, கேரளாவை நோக்கி வந்த காரை மறித்து பறக்கும்படையினர் சோதனை செய்தனர்.

இதில் காரில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் இருந்தது. மேலும் விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் கம்பம் வரதராஜபுரத்தை சேர்ந்த செல்லத்துரை (45) என்பதும், பணம் கொண்டு வந்ததற்கான உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரிய வந்தது. 

இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். 
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.2 லட்சத்து 29 ஆயிரத்து 900-ஐ தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் உத்தமபாளையம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்