பதற்றமான வாக்குச்சாவடிகளை அதிகாரிகள் பார்வையிட்டனர்

பதற்றமான வாக்குச்சாவடிகளை அதிகாரிகள் பார்வையிட்டனர்;

Update:2021-03-09 00:33 IST
அன்னவாசல்
விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூர் மற்றும் ஆலத்தூர் பகுதிகளில் சில வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளை மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி ஆகியோர் பார்வையிட்டு அங்கு செய்யப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வாக்காளர்களுக்கு செய்யப்படவேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் அங்குள்ள அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். அப்போது தாசில்தார் பழனிச்சாமி, வருவாய் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்