100 சதவீத வாக்குப்பதிவு குறித்து சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மூலம் விழிப்புணர்வு

100 சதவீதம் வாக்களிப்பது குறித்து சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;

Update:2021-03-09 01:49 IST
அரியலூர்:
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில், அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் வைக்கப்பட்டிருந்த சமையல் கியாஸ் சிலிண்டர்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை கலெக்டரும், தேர்தல் அலுவலருமான ரத்னா ஒட்டினார். மேலும் 100 சதவீத வாக்கு என்பதை ஆங்கிலத்தில் குறிப்பிடும் வகையில் ஆங்கில எழுத்துக்களின் வடிவில் கியாஸ் சிலிண்டர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

மேலும் செய்திகள்