வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல்; தி.மு.க. பிரமுகர் கைது

வட்டார போக்குவரத்து அலுவலர் என்று கூறி வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல்; தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2021-03-09 01:49 IST
பாடாலூர்:
தேனி மாவட்டம் அனுமந்தம்பட்டியை சேர்ந்தவர் செல்வக்குமார்(வயது 45). தி.மு.க. பிரமுகரான இவர் திருச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டிற்கு வந்துவிட்டு, பின்னர் காரில் சென்றார்.
இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அவர் தன்னை வட்டார போக்குவரத்து அலுவலர் என்று கூறி, அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளிடம் பண வசூலில் ஈடுபட்டதாக புகார் வந்ததையடுத்து, செல்வக்குமாரை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் பாடாலூர் போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்த பாடாலூர் போலீசார் அவரிடம் இருந்த சுமார் ரூ.9 ஆயிரம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்