பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சாலையில் டயர்களை ஓட்டி இளைஞர் பெருமன்றத்தினர் போராட்டம்; சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு இளைஞர் பெருமன்றத்தினர் போராட்டம்

Update: 2021-03-09 04:44 GMT
சேலம்:
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று சாலையில் டயர்களை ஓட்டி நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது. அந்த அமைப்பை சேர்ந்த சிலர், டயர்களை ஓட்டி வந்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் போராட்டம் எதுவும் நடத்தக்கூடாது, கோரிக்கை மனுவை பெட்டியில் போட்டுவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதனை தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனுவை நிர்வாகிகள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டுவிட்டு அங்கிருந்து சென்றனர்.

மேலும் செய்திகள்