உசிலம்பட்டி,மார்ச்.
உசிலம்பட்டி நகரின் மையப்பகுதியான பேரையூர் ரோடு நந்தவன தெரு செல்லும் வழியில் சாலையோரத்தில் அமைந்துள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள மின் டிரான்ஸ்பார்மரில் தீப்பற்றி எரிவதை கண்டு அச்சமடைந்த பொதுமக்கள் மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் விரைந்து வந்த மின் வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்து தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.