குளித்தலை
குளித்தலை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குளித்தலை உதவி கலெக்டர் அலுவலகத்தில் குளித்தலை தொகுதி தேர்தல் மண்டல அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்களுக்கான கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு குளித்தலை உதவி கலெக்டர் ஷேக்அப்துல்ரகுமான் தலைமை தாங்கி வாக்குப்பதிவு அன்று வாக்குப்பதிவு எந்திரங்களை எவ்வாறு கையாள வேண்டும். விண்ணப்ப படிவங்களை எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும் என்பன உள்பட தேர்தல் தொடர்பான பல்வேறு ஆலோசனை கூறினார். இதில் குளித்தலை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கலியமூர்த்தி, தேர்தல் துணை தாசில்தார் வைரப்பெருமாள், வருவாய் ஆய்வாளர் துரைசாமி மற்றும் தேர்தல் மண்டல அலுவலர்கள், உதவி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.