தேர்தல் விதியை மீறியதாக ஸ்ரீரங்கம் அ.தி.மு.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் மீது வழக்கு

தேர்தல் விதியை மீறியதாக ஸ்ரீரங்கம் அ.தி.மு.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update:2021-03-17 02:17 IST
ஸ்ரீரங்கம், 
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன். இவர், நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான மகேந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். 2 பேர் மட்டுமே வேட்பாளருடன் வரவேண்டும் என தேர்தல் விதி உள்ள நிலையில், கு.ப.கிருஷ்ணனின் ஆதரவாளர்கள் அலுவலக வளாகத்தில் பலர் திரண்டு நின்றிருக்க, அவர் தாசில்தார் அலுவலகத்திற்குள் 5 பேருடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், கு.ப.கிருஷ்ணன் மற்றும் சிலர் மீது தேர்தல் சட்ட விதிகளை மீறி ஒன்று கூடுதல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்