வேனில் எடுத்து சென்ற ரூ.66 லட்சம் பறிமுதல்

வீரசிங்கம்பேட்டையில் வேனில் எடுத்து சென்ற ரூ.66 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அப்போது அந்த பணத்துக்கு உரிய ஆவணம் காண்பிக்கப்பட்டதால் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.;

Update:2021-03-18 01:53 IST
திருவையாறு:
வீரசிங்கம்பேட்டையில் வேனில் எடுத்து சென்ற ரூ.66 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அப்போது அந்த பணத்துக்கு உரிய ஆவணம் காண்பிக்கப்பட்டதால் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. 
ரூ.66 லட்சம் பறிமுதல் 
திருவையாறை அடுத்த வீரசிங்கம்பேட்டையில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அலுவலர் புனிதா தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அய்யம்பேட்டையிலிருந்து வீரசிங்கம்பேட்டை நோக்கி வந்த ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் தனியார் வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் வங்கியின் பணம் ரூ.66 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து  பறக்கும் படை அதிகாரி புனிதா மற்றும் போலீசார் வேனுடன் பணத்தை பறிமுதல் செய்து திருவையாறு தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மஞ்சுளாவிடம் ஒப்படைத்தனர். 
பணம் திரும்ப ஒப்படைப்பு 
இதையடுத்து தஞ்சையிலிருந்து வருமானவரித்துறை அதிகாரிகள், திருவையாறு துைண போலீஸ் சூப்பிரண்டு சித்திரவேல் மற்றும் போலீசார் வாகனத்தில் இருந்த ஆவணங்களையும், பணத்தையும் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இருந்தது தெரியவந்தது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.66 லட்சத்தை வேனில் வந்தவர்களிடம் அதிகாரிகள் திரும்பி ஒப்படைத்தனர். 

மேலும் செய்திகள்