படப்பை அருகே முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்; அதிகாரிகள் நடவடிக்கை

தமிழகத்தில் கொரோனா தொற்று விதிமுறைகளை கடைபிடிக்காதவர்ளுக்கு தமிழக அரசு அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளது.;

Update:2021-03-20 16:29 IST
இந்தநிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் படப்பை, எழிச்சூர், மாடம்பாக்கம், ஆதனூர், சென்னகுப்பம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிககளில் தொழிற்சாலைகள், ஒட்டல்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்று வட்டார வளர்ச்சி அலுவலர் வேல்முருகன் தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது தொழிற்சாலைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 50 பேர் முக கவசம் அணியாமல் இருந்ததை பார்த்த வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து தலா ரூ.200 வீதம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது படப்பை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அருண்ராஜ், மேலாளர் ஏழுமலை, படப்பை ஊராட்சி செயலர் முகமது ஆரிப் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் கொரோனா தொற்று பரவல் விதிமுறைகளை முறையாக கடை பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்