தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, கொரோனா வைரஸ் தடுப்பு உபகரணங்கள்

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, கொரோனா வைரஸ் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது.

Update: 2021-03-20 21:12 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் தேர்தலின்போது பணிபுரியவுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை குன்னம் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் தேஜஸ்வி நாயக் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக அதனை கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஸ்ரீவெங்கடபிரியா ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு முக கவசம், கையுறை, வெப்பநிலை பரிசோதனை கருவி, கிருமிநாசினி, முழு உடல் கவசம், வாக்காளர்களுக்கு கையுறை, வாக்குச்சாவடி மையங்களில் அலுவலர்கள் பயன்படுத்திய உபகரணங்களை சேகரித்திட குப்பைத்தொட்டிகள் போன்றவை வழங்கப்படவுள்ளன. அதனடிப்படையில் 857 தெர்மல் ஸ்கேனர் கருவியும், 6 லட்சத்து 90 ஆயிரத்து 900 பாலித்தின் கையுறைகளும், வாக்குச்சாவடிக்கு 25 வீதம் 20 ஆயிரத்து 400 முக கவசங்களும், ஒரு பணியாளருக்கு 100 மி.லி வீதம் 3,920 கிருமிநாசினி பாட்டில்களும், 53 ஆயிரத்து 856 சர்ஜிக்கல் முக கவசமும், அலுவலர்களுக்கு 26 ஆயிரத்து 928 ரப்பர் கையுறைகளும், 11,010 முழு உடல் கவசமும், வாக்குச்சாவடிக்கு 5 வீதம் 4,488 பாலித்தின் பைகள், ஆயிரம் குப்பைத் தொட்டிகள், 850 அட்டை பெட்டிகளும் அலுவலர்களுக்கு வழங்கப்படவுள்ளன, என்றார்.

மேலும் செய்திகள்