நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.4 குறைந்தது

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.4 குறைந்தது.

Update: 2021-03-21 01:29 GMT
நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.98-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை ரூ.4 குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கறிக்கோழி விலை கிலோ ரூ.94 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

இதனிடையே நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.44-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததோடு, முட்டை கொள்முதல் விலை 380 காசுகளாக இருந்து வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்