வேலாயுதம்பாளையம்
காகிதபுரம் பகுதியில், மது விற்கப்படுவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீ்சார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மசக்கவுண்டன் புதூர் டாஸ்மாக் கடை அருகே உள்ள பெட்டிக்கடையில், புகளூர் அண்ணாநகரை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 42) என்பவர் மது விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.