துடியலூரில் 3 பேருக்கு அடி உதை; 6 பேர் கைது

துடியலூரில் 3 பேருக்கு அடி உதைத்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2021-04-01 15:16 IST
துடியலூர்,

கோவை கவுண்டம்பாளையம் அருகில் உள்ள இடையர்பாளையம் அப்பாஸ் கார்டன் பகுதியை சேர்ந்த பூபதி மற்றும் அவரது நண்பர்கள் அப்பாஸ், ஜான் பாஷா  ஆகியோர் பேசிக்கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் உள்பட சிலர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் எற்பட்டு ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரன் உள்பட 6 பேர் சேர்ந்து 3 பேரையும் அடித்து உதைத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் 6 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்