தேனி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா
தேனி மாவட்டத்தில் மேலும் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.;
தேனி :
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரசால் நேற்று 13 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்து 312 ஆக உயர்ந்தது.
கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவர்களில் 10 பேர் குணமாகி நேற்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 17 ஆயிரத்து 49 பேர் மீண்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 56 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.