தூத்துக்குடி சொர்ணவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
தூத்துக்குடி சொர்ணவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.;
தூத்துக்குடி:
தூத்துக்குடி மட்டக்கடையில் பிரபலமான சொர்ணவிநாயகர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் சிவாச்சாரியார்கள் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.
விழாவில் வ.உ.சி. கல்லூரி செயலாளர் ஏ.பி.சி.வி.சொக்கலிங்கம், ஏ.பி.சி.வி.சண்முகம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.