வாகன சோதனையில் ரூ2 லட்சம் பறிமுதல்
வால்பாறை தொகுதியில் வாகன சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.;
பொள்ளாச்சி,
வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட தமிழக-கேரள எல்லையான மீனாட்சிபுரத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உமாமகேஸ்வரி தலைமையில் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை ஆவணங்கள் இ்ல்லாமல் கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதுபோன்று வால்பாறை அருகே உள்ள மளுக்கப்பாறை சோதனை சாவடியில் வாகன சோதனை நடந்தது.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரில் ஆவணங்கள் இல்லாமல் ரூ.58 ஆயிரம் கொண்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.