ஆலங்குடியில் ரூ.1½ லட்சம் பறிமுதல்

ஆலங்குடியில் ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update:2021-04-02 01:02 IST
ஆலங்குடி,ஏப்.2-
ஆலங்குடி தொகுதி தேர்தல் கூடுதல் கண்காணிப்பு நிலை அதிகாரி  சக்தி தலைமையில் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஜஹாங்கீர் என்பவர் வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தியதில், அதில் ரூ. 1 லட்சத்து 43 ஆயிரம் இருந்தது. ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் ஆலங்குடி தேர்தல் நடத்தும் அதிகாரி, அக்பர் அலி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி பொன்மலர் ஆகியோரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்