திருமயம் ஒன்றியத்தில் கிராமம், கிராமமாக சென்று அ.தி.மு.க. வேட்பாளர் வைரமுத்து வாக்கு சேகரிப்பு

திருமயம் ஒன்றியத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் பி.கே.வைரமுத்து கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார்.;

Update:2021-04-02 09:17 IST
திருமயம்,

திருமயம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.கே.வைரமுத்து நேற்று திருமயம் ஒன்றியம் விராச்சிலை பகுதியில் கிராமம், கிராமமாக சென்று வாக்குசேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:- ஜெயலலிதாவின் வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நல்ல பல திட்டங்களை தந்துள்ளனர். விவசாய கடன் தள்ளுபடி, 6 பவுன் நகை கடன் தள்ளுபடி, சுய உதவி குழு கடன் தள்ளுபடி செய்தது அ.தி.மு.க. அரசு. கொரோனா காலகட்டத்தில் ஓடி வந்து உதவிய அரசு ஜெயலலிதா அரசு. இது ஜெயலலிதா ஏற்றிவைத்து சென்ற விளக்கு, இதை அணையாமல் பார்த்துக் கொள்வது உங்களுடைய கடமை ஆகும்.

 உங்களுக்கு சேவை செய்வதற்காகவே வந்துள்ளேன். எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள், உங்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்து சேர்ப்பது எனது கடமை. என்றைக்கும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன். எனது சம்பளம் முழுவதும் ஏழை-எளிய பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கும் செலவு செய்வேன் என தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும் தேர்தல் வாக்குறுதியில் கூறிய படி 6 கியாஸ் சிலிண்டர், குடும்பத் தலைவிக்கு ரூ.1,500, சோலார் அடுப்பு, வாஷிங் மெஷின் என அனைத்தும் வீடு தேடி வந்திட இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தின்போது, ஒன்றிய செயலாளர்கள் ராமு, பழனிவேலு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

மேலும் செய்திகள்