100 சதவீதம் வாக்களிப்பது குறித்து நாட்டுப்புற பாட்டு மூலம் விழிப்புணர்வு பிரசாரம்

100 சதவீதம் வாக்களிப்பது குறித்து நாட்டுப்புற பாட்டு மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

Update: 2021-04-03 21:29 GMT
பெரம்பலூர்:
சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்தும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வாக்காளர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் பெரம்பலூர் அரசு இசைப்பள்ளி மாணவர்கள் தப்பு அடித்தும், ஆசிரியர் நடராஜன் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நாட்டுப்புற பாடல்களை பாடியும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிரசாரம் செய்தனர். முன்னதாக இந்த பிரசாரத்தை பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஸ்ரீவெங்கடபிரியா தொடங்கி வைத்தார். இதையடுத்து இந்த விழிப்புணர்வு பிரசாரம் பெரம்பலூர்-குன்னம் தொகுதிகளில் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அரசு கேபிள் டி.வி. தாசில்தார் நூர்ஜகான், உதவியாளர் இந்துமதி ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்