காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சசிகலா சாமி தரிசனம்

காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார்.

Update: 2021-04-04 00:47 GMT

சாமி தரிசனம்

தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்திருந்த சசிகலா தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று உலக புகழ் பெற்ற காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு அ.ம.மு.க. வேட்பாளர்கள் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார், மொளச்சூர் பெருமாள், மனோகரன், ஆகியோர் பட்டாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அவருக்கு கோவில் ஸ்ரீகாரியம் செல்லா விஸ்வநாத சாஸ்திரி, கோவில் அர்ச்சகர் நடனம் சாஸ்திரிகள் ஆகியோர் குங்கும பிரசாதம் வழங்கினார்கள்.

சங்கராச்சாரியாரிடம் ஆசி

அதன் பின்னர் அவர் புகழ் பெற்ற காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றார்.

அங்கு மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் தரிசனம் செய்தார்.

மேலும் செய்திகள்