எட்டயபுரத்தில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதால் சலசலப்பு

எட்டயபுரத்தில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதால் சலசலப்பு;

Update:2021-04-06 19:10 IST
எட்டயபுரம்:
எட்டயபுரம் பகுதியில் மொத்தம் 14 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் வாக்குச்சாவடி எண் 56-ல் அதிகாலையில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. உடனே வாக்குப்பதிவு அலுவலர்கள் மாற்று எந்திரத்தை கொண்டு வந்து சரி செய்தனர். அந்த எந்திரமும் செயல்படாததால் 3-வது ஒரு எந்திரத்தை கொண்டு வந்து அதில் வாக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். மேலும் எட்டயபுரம் பகுதியில் புதிய வாக்காளர்கள் தங்களது வாக்குகளை ஆர்வத்துடன் பதிவு செய்தனர். மேலும் வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகளும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். 

மேலும் செய்திகள்