ஈரோடு மாவட்டத்தில் 76.91 சதவீதம் வாக்குப்பதிவு- அதிகபட்சமாக பவானியில் 83.70 சதவீதம் பதிவானது

ஈரோடு மாவட்டத்தில் 76.91 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக பவானியில் 83.70 சதவீதம் வாக்குகள் பதிவானது.

Update: 2021-04-06 23:50 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வமாக வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். காலையில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்ததால் வாக்களிக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை 9 மணி நிலவரப்படி 12.45 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 9.44 சதவீதமும், ஈரோடு மேற்கு தொகுதியில் 14.4 சதவீதமும், மொடக்குறிச்சி தொகுதியில் 15.17 சதவீதமும், பெருந்துறை தொகுதியில் 15 சதவீதமும், பவானி தொகுதியில் 16.02 சதவீதமும், அந்தியூர் தொகுதியில் 10.91 சதவீதமும், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 12 சதவீதமும், பவானிசாகர் தொகுதியில் 6.67 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
வாக்குப்பதிவு
பகல் 11 மணி நிலவரப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 24.1 சதவீதமும், மேற்கு தொகுதியில் 29.88 சதவீதமும், மொடக்குறிச்சி தொகுதியில் 27 சதவீதமும், பெருந்துறை தொகுதியில் 27 சதவீதமும், பவானி தொகுதியில் 31 சதவீதமும், அந்தியூர் தொகுதியில் 25.67 சதவீதமும், கோபி தொகுதியில் 29.98 சதவீதமும், பவானிசாகர் தொகுதியில் 13.2 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன.
மதியம் 1 மணி நிலவரப்படி மாவட்டத்தில் 45.87 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 45.67 சதவீதமும், மேற்கு தொகுதியில் 47.71 சதவீதமும், மொடக்குறிச்சி தொகுதியில் 48.86 சதவீதமும், பெருந்துறை தொகுதியில் 42 சதவீதமும், பவானி தொகுதியில் 50 சதவீதமும், அந்தியூர் தொகுதியில் 45.07 சதவீதமும், கோபி தொகுதியில் 47.4 சதவீதமும், பவானிசாகர் தொகுதியில் 40.01 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
சதவீதம்
பிற்பகல் 3 மணி நிலவரப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 53.95 சதவீதமும், ஈரோடு மேற்கு தொகுதியில் 58.16 சதவீதமும், மொடக்குறிச்சி தொகுதியில் 61.34 சதவீதமும், பெருந்துறை தொகுதியில் 55.8 சதவீதமும், பவானி தொகுதியில் 62.6 சதவீதமும், அந்தியூர் தொகுதியில் 56.25 சதவீதமும், கோபி தொகுதியில் 62.76 சதவீதமும், பவானிசாகர் தொகுதியில் 53.4 சதவீதமும் ஓட்டுப்பதிவு நடந்தது.
மாலை 5 மணி நிலவரப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 61.37 சதவீதமும், மேற்கு தொகுதியில் 65.9 சதவீதமும், மொடக்குறிச்சி தொகுதியில் 71.17 சதவீதமும், பெருந்துறை தொகுதியில் 69.5 சதவீதமும், பவானி தொகுதியில் 78 சதவீதமும், அந்தியூர் தொகுதியில் 70.09 சதவீதமும், கோபி தொகுதியில் 75.68 சதவீதமும், பவானிசாகர் தொகுதியில் 67.91 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன.
76.91 சதவீதம்
முடிவில் இரவு 7 மணி நிலவரப்படி ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 76.91 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. மேலும், தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் விவரம் சதவீதத்தில் வருமாறு:-
ஈரோடு கிழக்கு - 66.23
ஈரோடு மேற்கு - 69.35
மொடக்குறிச்சி - 75.26
பெருந்துறை - 82.50
பவானி - 83.70
அந்தியூர் - 79.74
கோபிசெட்டிபாளையம் - 82.51
பவானிசாகர் - 77.27
கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் 79.39 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. எனவே கடந்த சட்டமன்ற தேர்தலை விட இந்த தேர்தலில் 3 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்து உள்ளது. அதிகபட்சமாக பவானி சட்டமன்ற தொகுதியில் 83.70 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொதியில் 66.23 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

மேலும் செய்திகள்