கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு வாக்குச்சாவடியில் சானிடைசர் வழங்க தி.மு.க.வினரை நிறுத்தியதால் பரபரப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு வாக்குச்சாவடியில் சானிடைசர் வழங்க தி.மு.க.வினரை நிறுத்தியதால் பரபரப்பு.

Update: 2021-04-07 06:03 GMT
ஸ்ரீபெரும்புதூர், 

தமிழகம் முழுவதும் நேற்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கைகளை சுத்தம் செய்யும் சானிடைசர் வழங்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு ஊராட்சியில் அரசு பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்களுக்கு சானிடைசர் வழங்க தி.மு.க.வை சேர்ந்த 4 பெண்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதை அறிந்த செங்காடு அ.தி.மு.க. நிர்வாகி பாபு தேர்தல் அதிகாரிடம் புகார் தெரிவித்தார். பின்னர் அவர்களுக்கு பதில் வேறு நபர்கள் நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்