கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக ராமேசுவரம், தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

Update: 2021-04-07 19:52 GMT
ராமேசுவரம்,
கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக ராமேசுவரம், தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.
வெறிச்ேசாடின
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாகவே கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது. சராசரியாக ஒரு நாளைக்கு தமிழகம் முழுவதும் 2500-க்கும் அதிகமான கொரோனா பாதிப்பு இருந்து வருகின்றது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதன் எதிரொலியாக ராமேசுவரம் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் வருகை மிகவும் குறைந்துள்ளது.
இதனால் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோவிலின் ரதவீதி சாலை, பிரகாரம் பகுதிகளும் பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றன.
கடைகள் மூடல்
இதேபோல் சுற்றுலா இடமான தனுஷ்கோடி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்து விட்டன. இதன் காரணமாக தனுஷ்கோடி கம்பி பாடு பகுதியில் உள்ள புயலால் அழிந்து போன இடங்களும் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றன.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதின் அச்சத்தின் காரணமாக சுற்றுலா பயணிகள் இங்கு சுற்றுலா வருவதை தவிர்த்து வருகின்றனர். எனவே, சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளதால் இப்பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சிப்பி, சங்கு உள்ளிட்ட பெரும்பாலான கடைகளும் மூடப்பட்டு கிடக்கின்றன.

மேலும் செய்திகள்