சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம்

சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம்

Update: 2021-04-08 15:04 GMT
சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு தாலுகா தச்சாம்பாடி கிராமத்தில் ஆர்.சி.எம். பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்தலின்போது கிராம நிர்வாக அதிகாரி ராஜாராம் பணியில் இருந்தார். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் அவரை பணி செய்ய விடாமல் தடுத்தனர். இதைத் தட்டிக்கேட்ட கிராம நிர்வாக அலுவலர் ராஜாராம் தாக்கப்பட்டார். 

இதுகுறித்து அவர், சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் நடவடிக்கை எடுக்காததால் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பாக சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சேத்துப்பட்டு வட்டாரச் செயலாளர் ஜான்சன் தலைமை தாங்கினார். 

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கிராம நிர்வாக அலுவலர் ராஜாராமை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். போராட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அலுவலக வாசல்படியில் அமர்ந்திருந்ததால் தாலுகா அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் உள்ளே செல்ல முடியாமல் திரும்பி சென்று விட்டனர்.

மேலும் செய்திகள்