மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் 11-ந்தேதி ஊஞ்சல் உற்சவம் ரத்து
ஊஞ்சல் உற்சவம் ரத்து;
மேல்மலையனூர்,
கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் 11-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அமாவாசையன்று நடைபெற இருந்த ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும் அன்றைய தினம் கோவிலில் பக்தர்களின் அனைத்து வகையான தரிசனங்களுக்கும் அனுமதிக்கப்படுகிறது. அரசு போக்குவரத்துத்துறை சார்பில் இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் எதுவும் இயக்கப்படாது.
இந்த தகவலை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு தெரிவித்துள்ளார்.