ஏலகிரி மலையில் 13 இடங்களில் பற்றி எரியும் காட்டுத்தீ

ஏலகிரி மலையில் 5-வது முறையாக 13 இடங்களில் தீப்பற்றி எரிந்து வருகிறது.

Update: 2021-04-08 16:45 GMT
ஜோலார்பேட்டை

காட்டுத்தீ

ஜவ்வாதுமலை அமைந்துள்ள ஏலகிரி மலையில் வனப்பகுதி பல கிேலா மீட்டர் தூரத்துக்கு பரந்து விரிந்துள்ளது. கோடைகாலங்களில் அடிக்கடி வனப்பகுதியில் தீ பற்றுவதால் மழைக்காலங்களில் செழித்து வளர்ந்த மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் சொரங்கன் வட்டம், ஏலகிரி கிராமம், சின்னகவுண்டனூர் ஆகிய பகுதிகளில் உள்ள மலையடிவாரத்தில் மர்ம நபர்கள் வைத்த தீ முழுவதுமாக அணைக்கப்படவில்லை.
இந்த நிலையில் வேகமாக எரிந்த காட்டுத்தீ 13 பகுதிகளுக்கு பரவியது. 

இந்த காட்டுத்தீயால் காட்டிலிருந்த அரியவகை மரம், செடி, கொடிகள், புல் வகைகள் எரிந்ததோடு சிறிய வகை பிராணிகளான ஆமை, பாம்பு, மயில் ஆகியவை கருகி இறந்தன.

தீவிரப்படுத்த வேண்டும்

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் சிறிய தீப்பொறி ஏற்பட்டாலும் காட்டுப்பகுதிக்குள் தீப்பிடித்து மரங்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமாகியது. இதனால் அவ்வப்போது நடைபெறும் துறை அலுவலர்களின் ஆலோசனை கூட்டத்தில் காட்டுப் பகுதிக்குள் மர்ம நபர்கள் தீ வைப்பது கண்டறியப்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் சிவன்அருள் உத்தரவிட்டு இருந்தார். 

எனவே வனத்துறையினர் பகல் நேரத்திலும் இரவு நேரத்திலும் கண்காணிப்பில் ஈடுபட்டு தீவைப்பில்ஈடுபடும் சமூக விரோதிகளை கைது செய்வதோடு தீ பரவுவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்