வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது
மூங்கில்துறைப்பட்டு அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
மூங்கில்துறைப்பட்டு,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் அஜித்(வயது 26). இவரும் இவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் சஞ்சீவிகாந்தி, திருவண்ணாமலை மாவட்டம் கண்டியாங்குப்பம் பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் சின்னராஜா ஆகியோரும் அருளம்பாடி முஸ்குந்தா நதி அருகே உள்ள ஒரு கோவில் பின்பகுதியில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் அஜித் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் வாங்கிய கடனை திருப்பி கேட்டது தொடர்பாக அஜித்தை சின்னராஜா, சஞ்சீவிகாந்தி ஆகியோர் கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து சின்னராஜா, சஞ்சீவிகாந்தி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.