படப்பை அருகே தண்ணீர் என்று நினைத்து திராவகத்தை மதுவில் கலந்து குடித்த முதியவர் சாவு

படப்பை அருகே தண்ணீர் என்று நினைத்து திராவகத்தை மதுவில் கலந்து குடித்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update:2021-04-15 09:36 IST
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வட்டம்பாக்கம் பகுதியில் உள்ள காஞ்சீவாக்கம் கலைஞர் தெருவை சேர்ந்தவர் காளி (வயது 63), இவர் செரப்பனஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மது குடித்த அவர் மீதி மதுவை வீட்டுக்கு எடுத்துச் சென்றார். அப்போது கழிவறை சுத்தம் செய்வதற்காக வைத்திருந்த திராவகத்தை தண்ணீர் என்று நினைத்து மதுவில் கலந்து குடித்து விட்டார்.

இதையடுத்து அவரை சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த காளி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்