கடத்தூர் அருகே எல்.ஐ.சி. முகவர் வீட்டில் நகை, பணம் திருட்டு

எல்.ஐ.சி. முகவர் வீட்டில் நகை, பணம் திருட்டு;

Update:2021-04-15 23:42 IST
கடத்தூர்:
கடத்தூரை அடுத்த ஒடசல்பட்டியில் வசிப்பவர் சரவணன். இவர் தர்மபுரியில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் எல்.ஐ.சி. முகவராக பணிபுரிந்து வருகிறார், இவர் கடந்த 14-ந் தேதி கவுண்டம்பட்டிக்கு சென்றார். நேற்று காலை தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது 2 அறைகளில் இருந்த பீரோக்களில் இருந்த 8 பவுன் நகை, ரூ.92 ஆயிரம் திருடப்பட்டு இருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி கடத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் ஜெய்சல் குமார் வந்து பார்வையிட்டார். கைரேகை நிபுணர்கள் வந்து பதிவான ரேகைகளை ஆய்வு செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி திருடர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்