சங்கராபுரம் அருகே வியாபாரி மனைவி விஷம் குடித்து தற்கொலை

சங்கராபுரம் அருகே வியாபாரி மனைவி விஷம் குடித்து தற்கொலை;

Update:2021-04-16 21:44 IST
சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் அண்ணாமலை(வயது 55) கிழங்கு வியாபாரி. இவரது முதல் மனைவி தேவகி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதையடு்த்து சங்கராபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஜெயந்தி(45) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.   சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஜெயந்தி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ஜெயந்தி பரிதாபமாக இறந்தார். மாற்றுத்தினாளி என்பதால் தன்னால் கணவருக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்று மனமுடைந்த அவர் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சங்கராபுரம் போலீசில் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சவுக்கத்அலி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்