பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு

வத்திராயிருப்பு பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.

Update: 2021-04-18 21:42 GMT
வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. 
தொடர்மழை 
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிலும்,  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 31 அடியில் இருந்து 2 அடி உயர்ந்து 33.73 அடியாக உள்ளது. 
2 அடி உயர்வு 
அதேபோல கோவிலாறு அணையின் நீர்மட்டம் 26.25 அடியாக உயர்ந்து உள்ளது. தற்போது பிளவக்கல் பெரியாறு அணைக்கு 0.08 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. 
வத்திராயிருப்பு சுற்றி உள்ள 40 கண்மாய்களில் 15 கண்மாய்களில் 75 சதவீதம் நீர் இருப்பு உள்ளதாகவும், 15 கண்மாய்களில் 50 சதவீதம் நீர் இருப்பு உள்ளதாகவும்,  மீதமுள்ள 10 கண்மாய்களில் 20 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி 
அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகள் மூலம் வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் 8 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் தங்களது சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர். 

மேலும் செய்திகள்