அரசுத்துறையில் ஊர்தி ஓட்டுனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசுத்துறையில் ஊர்தி ஓட்டுனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என மாவட்ட அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2021-04-18 22:11 GMT
விருதுநகர், 
 வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசுத்துறையில் ஊர்தி ஓட்டுனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என மாவட்ட அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 மாவட்ட குழு கூட்டம் 
விருதுநகரில் மாவட்ட அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்க கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பூவணலிங்கம், பொருளாளர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத்துறைஊர்தி ஓட்டுனர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
காலிப்பணியிடம் 
 அனைத்து துறைகளிலும் உள்ள ஓட்டுனர்  காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நியமனம் செய்யப்பட வேண்டும்.
 சிவகாசி மற்றும் விருதுநகர் வணிகவரித்துறை அலுவலக உதவியாளர்கள் மூலம் வாகனங்கள் இயக்கப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசுத்துறை ஊழியர்களுக்கு ஓய்வுஅறை ஒதுக்கீடு செய்து தர வேண்டும். மதுரை ஐகோர்ட்டில் மாநில சங்கத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கினை வாபஸ் பெற சங்கம் வலியுறுத்துகிறது. 
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
மேலும் இக்கூட்டத்தில் முன்னாள் மாவட்டத்தலைவர் முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்