காஞ்சீபுரத்தை அடுத்த செவிலிமேடு ராமானுஜர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
காஞ்சீபுரத்தை அடுத்த செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ள ராமானுஜர் கோவிலில் சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்த ராமானுஜரின் ஜெயந்தி விழா விமரி்சையாக நடைபெற்றது.;
இதையொட்டி ராமானுஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு மலர் அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு பஜனை பக்தி பாடல்கள் பாடப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் முக கவசத்துடன் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.