தட்டார்மடம் அருகே டிரக்கர், மோட்டார் சைக்கிள் உடைப்பு
தட்டார்மடம் அருகே, டிரக்கர், மோட்டார் சைக்கிள் உடைக்கப்பட்டது.;
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே அரசூர் பூச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தர்மலிங்கம், சங்கர். சகோதரர்களான இவர்களுக்கு இடையே சொத்து பிரச்சினை இருந்தது. இந்த நிலையில் பக்கத்து ஊரான பூவுடையார்புரத்தைச் சேர்ந்த விவசாயி செல்வன் (வயது 50) தலையிட்டு சகோதரர்களுக்கு சொத்துகளை பிரித்து கொடுத்தார். அப்போது தர்மலிங்கத்துக்கு ஆதரவாக செல்வன் பேசவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த தர்மலிங்கம் சம்பவத்தன்று இரவில் செல்வனுக்கு சொந்தமான டிரக்கர், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை கம்பால் அடித்து உடைத்து, செல்வனுக்கு கொலைமிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின்பேரில், தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான தர்மலிங்கத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.