4 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது
4 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.;
கமுதி,
கமுதி அருகே எழுவனூர் அரசு பள்ளி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, இன்ஸ்பெக்டர் அன்புபிரகாசம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலிப்பி என்ற ஊரைச்சேர்ந்த ஆதிமூலம் (வயது30) மூடையில் 4 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மண்டலமாணிக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.