கோத்தகிரியில் நிழல் விழாத நேரம்

கோத்தகிரியில் நிழல் விழாத நேரம்

Update: 2021-04-19 16:25 GMT
கோத்தகிரி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பூஜ்ஜிய நிழல் என்ற அரிய வானியல் நிகழ்வு நடந்தது. அதாவது குறிப்பிட்ட பகுதியில் தொடுவானத்திற்கு நேர் செங்குத்தாக சூரியன் வரும்போது நிழல் விழாது. இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் கே.ஜே.ராஜூ வழிகாட்டுதலின்பேரில் பள்ளி மாணவர்கள் ஆய்வு செய்தனர்.

இதையொட்டி நேற்று காலை 11 மணி முதல் சில பொருட்களுடைய நிழல்களின் நீளங்களை அரை மணி நேரத்துக்கு ஒருமுறை கணக்கிட்டனர். மதியம் 12.23 மணிக்கு பூஜ்ஜிய நிழல் நிகழ்வு நடந்தது. அப்போது மாணவர்கள் கை தட்டி ஆரவாரமிட்டனர். இதன் மூலம் பூமியின் சுற்றளவு, பரப்பளவை கணக்கிடும் முறை மற்றும் சூரியனின் சுற்றுவட்ட பாதையை கணக்கிடும் முறையை கற்றுக்கொண்டனர்.

மேலும் செய்திகள்