காஞ்சீபுரம் மண்டலத்தில் அரசு பஸ்கள் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும்

தமிழக அரசின் உத்தரவின்படி, காஞ்சீபுரம் மண்டலத்தில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயக்கப்படுகிறது.;

Update:2021-04-20 16:13 IST
இரவு 10 மணி முதல் மாலை 4 மணி வரை எந்த ஒரு பஸ்சும் தடத்தில் இயங்காததால், பயணிகள் இரவு 10 மணிக்குள் தாங்கள் சென்றடைய வேண்டிய இடத்திற்கு செல்ல தங்களின் புறப்பட வேண்டிய நேரத்தை முன்கூட்டியே திட்டமிட்டு அமைத்துக் கொள்ள வேண்டும். மேலும் பயணிகள் முக கவசம் அணிந்தால் மட்டுமே பஸ்சில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என காஞ்சீபுரம் மண்டல போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்